சென்னை மெரினா கடற்கரையில் தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடம் பிரம்மாண்டமான முறையில் அமைக்கப்பட்டுள்ளது. கலைஞர் நினைவிடத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் 26-02-2024 அன்று திறந்து வைக்கப்பட்டது. கலைஞர் நினைவிடம் திறந்து வைக்கப்பட்ட முதல் பல்லாயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் அரசியல் வரலாறை பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்கும் விதமாக அந்த நினைவிட வளாகத்தில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பிரம்மாண்டமான முறையில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. கலைஞரின் வாழ்க்கை வரலாறு, அரசியல் பயணம் மற்றும் முன்னாள் முதலமைச்சர் எழுதிய புத்தகங்கள் என அனைத்தும் அருங்காட்சியத்தில் இடம் பெற்றுள்ளது. கலைஞர் அருங்காட்சியத்தை பொதுமக்கள் பார்வையிடுவதற்காக வருகின்ற 6 – 03 – 2024 புதன்கிழமை முதல் அனுமதிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
பொதுமக்கள் முன்பதிவு செய்து அனுமதி சீட்டு பெற்றுக்கொள்வதற்காக இணையதள முகவரியை தமிழ்நாடு அரசு தற்பொழுது அறிவித்துள்ளது. https://www.kalaignarulagam.org/ என்ற இணையதள முகவரி மூலமாக பொதுமக்கள் கலைஞர் அருங்காட்சியகம் பார்வை அதற்கு முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தினம் தோறும் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை அருங்காட்சியகம் ஆறு காட்சிகளாக நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கலைஞர் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்துவதற்கு அனுமதி சீட்டு ஏதும் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.