சென்னை மாநகரில் தற்பொழுது பிச்சைக்காரர்களின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போக்குவரத்து சிக்னலில் கை குழந்தைகளுடன் பிச்சை எடுக்கும் பெண்கள் மற்றும் பள்ளிக்கு செல்லும் வயதில் பிச்சை எடுக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிச்சை எடுப்பதை தடுப்பதற்கு பல நடவடிக்கை எடுத்தாலும் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பிச்சை எடுப்பவர்களின் எண்ணிக்கை குறைவதில்லை தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்து வருகிறது.
பிச்சைக்காரர்கள் இல்லாத மாநகராக சென்னை மாநகரை மாற்றுவதற்கு பல முயற்சிகளில் அரசு ஈடுபட்டு வருகிறது. ஆனால் அரசு நடவடிக்கைகளில் தாமதம் ஏற்படுவதால் பிச்சைக்காரர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் சென்னையில் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
சென்னை மாநகரை பிச்சைக்காரர்களை இல்லாத சிங்கார சென்னை ஆக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் பிச்சைக்காரர்கள் தங்குவதற்கு சென்னை மாநகராட்சி விடுதிகள் மற்றும் முகாம்கள் என அனைத்து வசதிகளும் செய்து கொடுத்துள்ளது.
ஆரம்பத்தில் பிச்சைக்காரர்கள் தங்குவதற்கு 15 விடுதிகள் மட்டுமே இருந்த நிலையில் 200 வார்டுகளிலும் பிச்சைக்காரர்கள் மறு வாழ்விற்காக தங்கும் விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது போன்ற விடுதிகளில் மாநகராட்சி பணியாளர்களின் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.