திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள வருவாய் வட்டாச்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், மூன்று கட்ட போராட்டங்கள் இன்று நடைபெற்று வருகின்றன.
வருவாய் கிராம ஊழியர் சங்கர் தலைவர் குப்புராஜ் தலைமையில், நடைபெற்றது. இதில் பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைப்படுத்திட வேண்டும்.சத்துணவு மற்றும் அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள். ஊர்புற நூலகர்கள் எம்.ஆர்.பி செவிலியர்கள் உள்ளிட்ட சிறப்பு காலமுறை ஊதியம்.
தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெறும் மூன்றரை இலட்சம் ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியமும். ஓய்வூதியமும் வழங்கிட வேண்டும்.சாலைப்பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும். அரசுத்துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் அனைத்தையும் காலமுறை ஊதியத்தில் நிரப்பிட வேண்டும். உள்ளிட்ட,கோரிக்கைகளை வலியுறத்தி திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற தமிழக முதல்வரின் கவனம் ஈர்த்திடும் வகையில் வட்டாட்சியர் அலுவலகம்முன்பு
ஏராளமான கிராம ஊழியர்கள் கலந்து கொண்டனர்.