சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் மணி இவர் பிரியாணி கடை திறப்பு விழாவை முன்னிட்டு 10 ரூபாய் நாணயம் கொண்டு வந்தால் சிக்கன் பிரியாணி கிடைக்கும் என்று பிரச்சாரத்தை ஏற்படுத்தினார். இதை தொடர்ந்து. காலை 11 மணி முதல் பொதுமக்கள் பிரியாணி கடையை நோக்கி திரண்டனர்.
இதனால் சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து ஆத்தூர் டவுன் காவல்துறை புதிதாக திறக்கப்பட்டுள்ள பிரியாணி கடைக்கு சென்று கடையை மூடினார். இதை தொடர்ந்து பிரியாணி கடை நடத்தி வந்த மணியை காவல் துறையினர் எச்சரித்து சென்றுள்ளனர்.
போலீசார் எச்சரிக்கை சென்ற பிறகு கடை உரிமையாளர் 10 ரூபாய் பிரியாணி தீர்ந்துவிட்டது என்று பலகையை வைத்துள்ளார். இதை அறிந்து கொண்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். புதிதாக திறக்கப்பட்ட பிரியாணி கடையினால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.