சென்னையில் உள்ள 13 தனியார் பள்ளிகளுக்கு நேற்று மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அந்த மின்னஞ்சலில் பள்ளியில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும். நேரம் கடத்தினால் குண்டு வெடித்து விடும் என்றும் மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து பள்ளி நிர்வாகம் சென்னை கமிஷனர் அலுவலகத்திற்கு தகவலை தெரிவித்தது.
தொடர்ந்து ஆறு பள்ளிகளில் இருந்து சென்னை கமிஷனர் அலுவலகத்திற்கு செய்தி தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து போலீசார் மோப்ப நாய்களுடன் வெடிகுண்டு மிரட்டல் விடுவித்த பள்ளிகளுக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். பள்ளிகளில் இருந்த மாணவ மாணவிகளை உடனடியாக வெளியேறும்படி அறிவிப்பு வெளியானது. இதைத் தொடர்ந்து மாணவ மாணவிகள் பள்ளியிலிருந்து வெளியேறினர்.
அதன் பின்னர் சோதனை அதிரடியாக நடைபெற்றது. முதலில் 6 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில் மேலும் சென்னையில் உள்ள 7 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் மூலமாக வந்தது அனைவரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து 13 பள்ளிகளையும் சோதனை செய்த போலீசார் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை என்று தெரிவித்துள்ளனர். இந்த செய்தியை கேட்டு அதிர்ச்சடைந்த பெற்றோர்கள் பள்ளிகளுக்கு விரைந்து வந்து அவர்களுடைய பிள்ளைகளை பதற்றத்துடன் அழைத்துச் சென்றனர்.
இதைத்தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் யார் விடுத்தது என்று விசாரணை நடத்த மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூலம் இந்த போல் உதவியை நாட சென்னை கமிஷனர் அலுவலகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.