சென்னையில் இருந்து புறப்படும் விமானங்களில் பவுடர் வடிவில் வெடிகுண்டு இருப்பதாக மரும நபர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். இதைத்தொடர்ந்து கொல்கத்தா விமான நிலையத்தில் உள்ள இணையதள முகவரிக்கு நேற்றைய தினம் இ – மெயில் மூலமாக மிரட்டல் கொடுக்கப்பட்டிருந்தனர்.
எச்சரிக்கை விடுத்த நிலையில் கொல்கத்தா விமான நிலையத்திலிருந்து சென்னை விமான நிலையத்தில் பணியாற்றும் சக ஊழியர்களை எச்சரித்தனர். சென்னையில் இருந்து மும்பை,டெல்லி, கொல்கத்தா போன்ற வட மாநிலங்களுக்குச் செல்லும் விமானங்களில் தீவிரமாக சோதனை நடத்தப்பட்டது. விமான நிலையங்கள் மட்டுமல்லாமல் பள்ளிகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.. இதைத் தொடர்ந்து மோப்ப நாய்களைக் கொண்டு சோதனை ஈடுபட்ட அதிகாரிகள் வழக்கம் போல் வெடிகுண்டு வைத்திருப்பதாக வந்த செய்தி போலி என உறுதி செய்தனர்.