இந்த பூ வருடத்தில் ஒருமுறை மட்டுமே பூக்கும் என்கிறார்கள். சாதாரணமாகவே பூக்கள் பூக்கும் தருணத்தில் மிகுந்த நறுமணம் வீசும். அதேபோல இந்த பூவும் பூக்கும் பொழுது மிகுந்த நறுமணம் வீசியுள்ளது. அதை காண்பதற்கு அக்கம் பக்கத்தினர் ஆர்வத்துடன் வந்து பார்த்து சென்றனர். தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள திருப்பாலைத்துறை உள்ள செட்டி தெருவில் வசித்து வருபவர் கார்த்திகேயன் இவரது வயது 60. இவர் வாடகை பாத்திர கடை ஒன்று நடத்தி வருகிறார். தனது வீட்டில் உள்ள தோட்டத்தில் பல்வேறு மூலிகை செடிகள் காய்கறிகள் பூக்கள் போன்றவை வளர்த்து வருகிறார்.
கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கார்த்திகேயன் ஓசூரில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார் அப்போது அங்கு வளர்ந்து வந்த பிரம்ம கமலம் செடியை அவர்களிடம் இருந்து வாங்கி வந்து தனது வீட்டில் வளர்த்து பராமரித்து, அந்தச் செடியில் ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே பூக்கள் பூக்கும் என்றும் அதுவும் அந்தப் போர் நள்ளிரவில் மட்டுமே பூக்கும் தன்மை உடையது.
இதைத்தொடர்ந்து அந்தச் செடியை வாங்கி வந்ததிலிருந்து அதாவது ஐந்து வருடத்திலிருந்து முதல் முறையாக நேற்று முன்தினம் இரவு சுமார் 9 மணிக்கு பிறகு மலர் மலரத் தொடங்கியுள்ளது. 12 மணிக்கு அந்த மலர் முழுவதும் மலர்ந்து அதன் பிறகு ஒரு மணிக்கு மேல் மூடத் தொடங்கியுள்ளது. அந்த மலரும் தருணத்தில் அப்பூவை பார்ப்பதற்கு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தனர். பிரம்ம கமலம் செடியில் இருந்து பூக்கும் பூவானது விடிவதற்குள் வாடி விடும் தன்மை கொண்டுள்ளது. அந்த பூ பூக்கும் பொழுது மிகுந்த நறுமணம் வீசும் தன்மை கொண்டது.