திருப்பத்தூர் மாவட்டம் சோலையார்பேட்டை ரயில்வே இரு பாலர் தமிழ் வழி உயர்நிலைப் பள்ளியில் 1988 ஆம் ஆண்டு பயின்ற மாணவர்கள் மாணவிகள் மறக்க முடியுமா சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
ஜோலார்பேட்டை ரயில்வே தமிழ் வழி உயர்நிலைப் பள்ளியில் பயின்ற மாணவ மாணவிகள் 37 வருடங்களுக்குப் பிறகு சந்தித்து ஏலகிரி மலையில் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு படகு சவாரி செய்தும் மதிய உணவு அருந்திய பின் நேச்சுரல் பார்க்கில் விளையாட்டுப் பிள்ளைகளை போல் புகைப்படங்களை எடுத்துக் கொண்டு பழைய நிகழ்வுகளை பேசி சந்தோஷமடைந்து அடுத்த முறை அனைவரும் குடும்பத்தோடு சந்திப்பதாக கூறி விடைபெற்றுச் சென்றனர்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட மறக்க முடியுமா நண்பர்கள் பா. சிவக்குமார், ஜெயக்குமார். ரமேஷ். பிரகாஷ். கன்னியப்பன். புனிதா. பிரமிளா. சிவக்குமார். முகுந்தன். விஜயராகவன். ரவிச்சந்திரன். கதிர்வேல் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.