தமிழகத்தில் சமீப காலமாகவே விபத்துக்கள் அதிகரித்து வருகிறது 18 வயதுக்கு கீழ் உள்ள சிறார்கள் வாகனம் ஓட்டுவதனால் விபத்துக்கள் அதிகரிக்கிறது என்று புள்ளி விபரம் கூறுகிறது. மேலும் அரசு தரப்பில் இருந்து பல்வேறு வகைகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் விபத்துக்கள் குறைவதில்லை.
இதைத் தொடர்ந்து தற்பொழுது மத்திய போக்குவரத்து அமைச்சகம் சார்பில் இருந்து 18 வயது பூர்த்தி அடைய சிறார்கள் நான்கு சக்கரம், இரு சக்கர வாகனம் ஓட்டினால் அந்த வாகனத்திற்கான பதிவு சான்றிதழ் ரத்து செய்யப்படும் என்றும் ரூ. 25,000 அவதாரம் விதிக்கப்படும் என்றும் வாகனம் ஓட்டி பிடிபட்ட சிறார்கள் 25 வயது வரை ஓட்டுநர் உரிமம் வழங்கப்படாது என்றும் மத்திய போக்குவரத்து அமைச்சகம் சார்பில் சில விதிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதைத் தொடர்ந்து பிடிப்பட்ட வாகனத்திற்கான பதிவு சான்றுகள் ரத்து என்ற விதிமுறை தமிழகத்தில் அமலாக்குவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து துறை சார்பில் அரசாணை வெளியிடப்படாததால் காலதாமதம் ஏற்படுவதாகவும் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஜூன் 4-ம் தேதிக்கு பிறகு இது தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்றும் போலீசார் தரப்பிலிருந்து தகவல் வெளியிடப்பட்டுள்ளது.