ஆல் பாஸ் முறை ரத்து:
மத்திய அரசாங்கம் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களின் ஆல் பாஸ் முறையை ரத்து செய்வதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மத்திய அரசின் கல்வி உரிமைச் சட்டமானது மாணவர்களின் கல்வி இடையில் நிறுத்தப்படாமல் இருப்பதற்காக கட்டாய தேர்ச்சியை அமல்படுத்திக்கொண்டிருந்தது
இதனால் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவ மாணவியர்கள் அனைவரும் தேர்ச்சி என்ற முறையில் ஒன்றிலிருந்து எட்டு வகுப்பு வரை கல்வி கற்று வந்தனர். இந்த முறையானது அனைவரும் தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து தற்போது ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்கள் ஆல்பாஸ் முறையில் இருந்து நீக்கப்பட்டு இருப்பதாக கல்வித்துறை செயலாளர் சஞ்சய் குமார் அறிவித்துள்ளார். இது பற்றி பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டார் அதில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளி குழந்தைகளும் கல்வி கற்றலில் ஏதும் தடை இல்லாமல் பயில வேண்டும் என்பதற்காக எட்டாம் வகுப்பு வரை ஆல் பாஸ் முறை வழங்கப்பட்டது. தற்போது கல்வி உரிமைச் சட்டத்தின் விதிகள் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.
ஐந்தாம் மற்றும் எட்டாம் வகுப்புகளில் தேர்ச்சி பெறாதவர்கள் மறுத்தேர்வு முறை இரண்டு மாதங்களில் எழுத வேண்டும் அதிலும் தேர்ச்சி பெறவில்லை என்றால் அதே வகுப்பில் ஓராண்டு பயிலும் முறையை தற்போது ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது
தேசிய கல்விக் கொள்கையை பின் தொடர்ந்து நடக்கும் அரசு பள்ளிகளுக்கு இப்புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. ஏழை எளிய மக்களின் குழந்தைகள் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை தடையின்றி கல்வி பயின்றதற்கு இந்த திட்டம் ஒரு தடையாகவே இருக்கிறது. இது மிகவும் வருத்தத்துக்கு ஆளாக்கியுள்ளது.
நமது மாநில தேவைக்காக தேசிய கல்விக் கொள்கையை பின்பற்றாமல் சிறந்த கல்வியாளர்களை ஒன்று திரட்டி ஒரு புதிய மாநில கல்வி முறை உருவாக்குவதற்கு நமது அரசு தொடங்கிய பணிகள் முடிவுக்கு வரும் நிலையில் இருக்கிறது தமிழ்நாட்டில் மாநில கல்விக் கொள்கை கடைப்பிடிக்கப்படும் நிலையில் ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கைகள் எதுவும் தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் ஒன்றிய அரசு பள்ளிகளை தவிர மற்ற பள்ளிகளுக்கு பொருந்தாது என்பதை அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெளிவுபடுத்தியுள்ளார்.
இது குறித்து பெற்றோர்களும், மாணவர்களும், ஆசிரியர்களும் குழப்பம் அடையாமல் இயல்பாக இருக்குமாறு அறிவித்ததோடு தமிழ்நாட்டில் ஒன்றிய அரசின் கல்வி உரிமைச் சட்டம் குறித்து விளக்கி முன்பிருந்த தேர்ச்சி முறையே தற்போதும் தொடரும் என்று ஆணித்தரமாக சொல்ல கடமைப்பட்டிருப்பதாக. அன்பின் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.