Home » Blog » ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்துவதற்கு எதிரான வழக்கு – உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணை

ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்துவதற்கு எதிரான வழக்கு – உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணை

by Pramila
0 comment

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தனியார் அமைப்பு இணைந்து சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த முடிவு செய்யப்பட்டது. மிக்ஜாம் புயல் காரணமாக கார் பந்தயம் ஒத்திவைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1-ம் தேதிகளில் சென்னை தீவுத்திடலைச் சுற்றி 3.5 கிலோமீட்டர் தூரத்துக்கு ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. பந்தயத்திற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. மின்விளக்குகள் பொருத்துவது, இந்த போட்டியை 8,000 பேர் கண்டு ரசிக்க இருக்கைகள், பாதுகாப்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும் சென்னை முழுவதும் இந்த கார் பந்தயம் குறித்து விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளது

இந்நிலையில் சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயத்தை நடத்துவதை எதிர்த்து தமிழ்நாடு பாஜக செய்தி தொடர்பாளர் பி.என்.எஸ். பிரசாத் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் அந்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது. ஆனால் இந்த வழக்கை இன்று பிற்பகலே அவசரமாக விசாரிக்க வேண்டும் என பாஜக தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில் நாளை விசாரிப்பதாக நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.

You may also like

Leave a Comment

நம் நிறுவனம்

தினமதி என்பது சந்தா இல்லாத தமிழ் இதழ் மற்றும் ஆன்லைன் சேவைகளை உலகம் முழுவதும் வழங்கும் மல்டிமீடியா நிறுவனமாகும்.

செய்திமடல்

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

Copyrights © 2024 Dinamathi.com. All rights reserved.