தென் இந்திய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்க சுழற்சி காரணமாகவும் காற்றின் திசை மாறுபாடு காரணமாகவும் தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில பகுதிகளிலும் மிதமான மலைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் நாளை பெரும்பாலான இடங்கள் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நாளை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 37 – 39 டிகிரி செல்சியஸ் காணப்படும் என்றும் இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் ஒரு சில இடங்களில் வெப்பநிலையின் அளவானது அதிகரித்து காணப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை அதிகபட்ச வெப்பநிலையானது 33 – 34 டிகிரி செல்சியஸ் காணப்படும் என்றும் வெப்பநிலையின் அளவானது இயல்பை விட அதிகரித்து காணப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.