சென்னை விமான நிலையத்திற்கு மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி வழியாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து காவல்துறையினர் மற்றும் நிபுணர்கள் உடனடியாக சென்னை விமான நிலையத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அனைத்து பகுதிகளையும் சோதனை செய்த பிறகு வெடிகுண்டு செய்தி புரளி என தெரிய வந்தது.
தொலைபேசி வாயிலாக சென்னை விமான நிலையத்தில் உள்ள கழிவறையில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு இருப்பதாகவும். இன்னும் சில நொடிகளில் வெடிக்க இருப்பதாகவும் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தது. இந்த தகவலின் படி போலீசார் விரைந்து வந்த சோதனை செய்ததில் வெடிகுண்டு மிரட்டல் முழுவதும் பொய் தகவல் என உறுதி செய்தனர்.
வெடிகுண்டு மிரட்டல் விடுத்த தொலைபேசி எண்ணை சோதனை செய்ததில் மாணவர்கள் தான் இந்த செயலில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. சேலையூர் மற்றும் அஸ்தினாபுரத்தைச் சேர்ந்த 11 – ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இரண்டு பேர் தான் இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர். இதை தொடர்ந்து போலீசார் அவர்கள் இருவரையும் அழைத்து அவர்களின் பெற்றோரை வைத்து எச்சரித்து அனுப்பியுள்ளனர்.