கடந்த சில வாரங்களுக்கு முன்பு சவுக்கு சங்கரைத் தொடர்ந்து ஃபெலிக்ஸ் ஜெரால் கைது செய்யப்பட்டார். பெண் போலீசாரை அவதூறாக பேசி வழக்கில் சவுக்கு சங்கர் மற்றும் ஃபெலிக்ஸ் ஜெரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சவுக்கு சங்கரை பேட்டி எடுத்து யூடியூப் சேனலில் வெளியிட்டதன் காரணமாகவே ஃபெலிக்ஸ் ஜெரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் ஃபெலிக்ஸ் ஜெரால் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். திருச்சி கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் ஃபெலிக்ஸ் ஜெரால் மனதாக்கல் செய்திருந்தார். இது தொடர்ந்து மனுவை விசாரித்த நீதிபதி ஜெயப்பிரதா நிபந்தனை ஜாமீன் வழங்கி உள்ளார்.
மேலும் 6 மாத காலங்கள் திருச்சி சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் ஃபெலிக்ஸ் ஜெரால் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் உத்தரவை பிறப்பித்துள்ளார். இதைத் தொடர்ந்து கோவை காவல் நிலையத்தில் ஃபெலிக்ஸ் ஜெரால் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதால் ஜாமீன் பெற்றிருந்தாலும் வெளியே வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து கோவை சிறையில் அடைக்கப்படுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது.