DGP அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட தலைமை காவலரால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுதியுள்ளது . கோதண்டபாணி இவர் சென்னையில் உள்ள ஓட்டேரி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றிவருகிறார் . இவர் ஆவடியில் உள்ள காவலர் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார் . கோதண்டபாணி நேற்று மதியம் சுமார் இரண்டு மணி அளவில் அவரும் அவரது மகள் பிரதிக்ஷா வயது 10 டிஜிபி அலுவலகம் வந்தனர். திடீரென அவரும் அவரது மகளும் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவலர் கூறுகையில்
எனது மகளுக்கு மூன்று வயது இருக்கும் பொழுது அவருக்கு சிறுநீரக பிரச்சனை ஏற்பட்டது. இதனால் எனது மகளை எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தேன். மருத்துவர்கள் எனது மகளை பரிசோதனை செய்த பிறகு சில மாத்திரைகளை பரிந்துரைத்தனர். அவர்களின் பரிந்துரையின் பேரில் கடந்த ஐந்து ஆண்டுகளாக எனது மகளுக்கு கொடுத்து வந்தேன்.
ஆனால் இந்த மாத்திரையின் எதிர் விளைவு காரணமாக எனது மகளின் வலது கால் பாதத்தில் அரிப்பு ஏற்பட்டது பின்பு மீண்டும் அவரை அதே மருத்துவமனையில் கொண்டு சேர்த்தேன். மருத்துவர்கள் மகளை சரியாக கண்டறியாமல் அவருக்கு சிகிச்சை அளித்தனர் . இந்த விளைவின் காரணமாக எனது மகளின் வலது கால் பாதம் சூம்பிப்போனது . அதுமட்டுமின்றி எனது மகளின் உடலில் பல்வேறு பிரச்சனைகளும் ஏற்பட்டன முழுமையாக இதற்கு மருத்துவர்களின் அலட்சியப் போக்கு தான் காரணம் என்று கூறினார் .
இதனால் தவறாக சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது பாரபட்சம் இன்றி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விட்டார். எனது மகளின் வாழ்வாதாரத்திற்கும் வழிவகை செய்ய வேண்டும். மாற்றுத் திறனாளியாகிவிட்ட எனது மகளுக்கு அதற்கான சான்றிதழ்களும் , நிதி உதவி, வாங்குவதற்காக சுமார் கடந்த இரண்டு ஆண்டுகளாக போராடி வருகிறேன். ஆனால் இதற்கான நியாயம் கிடைக்கவில்லை, இதனால் என்னையும் எனது மகளையும் கருணை கொலை செய்யுமாறு குடியரசு தலைவருக்கு கோரிக்கை வைக்கிறேன் என்று காவலர் கூறினார். பின்பு காவலரை சமாதானம் செய்து அவரை அனுப்பி வைத்தனர்.