தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாத காலங்களாகவே கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அந்த வகையில் நேற்று 227 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து கோவையில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவலை வெளியிட்டுள்ளது.
நேற்று கொரோனா தொற்றில் இருந்து தமிழ்நாட்டில் ஐந்து பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் இதை தொடர்ந்து மேலும் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. நேற்றைய நிலவரத்தின்படி கொரோனா தொற்றினால் உயிரிழப்பு எதும் பதிவாகவில்லை, மேலும் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே உள்ளது.
இதை தொடர்ந்து சுகாதாரத்துறை பல்வேறு கட்டுப்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ள இருப்பதாகவும் வெளியில் செல்லும் பொழுது அவசியம் முக கவசம் அணிய வேண்டும் என்றும் சில அறிவுரைகளை வழங்கி உள்ளது. கர்ப்பிணி பெண்கள் மற்றும் முதியவர்கள் வெளியில் செல்லும் பொழுது மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.