கொரோனா தொற்றின் எண்ணிக்கை கடந்த சில ஒரு மாத காலம் ஆகவே நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதில் கலந்து நேற்று தமிழ்நாட்டில் 225 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. கொரோனா பரிசோதனை செய்ததில் சென்னையைச் சேர்ந்த 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் செங்கல்பட்டு நீலகிரி மாவட்டத்தில் தலா ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளதாக சுகாதாரத்துறை தகவலை வெளியிட்டுள்ளது.
நேற்றைய தினம் கொரோனா பாதிப்பில் இருந்து முழுமையாக குணம் பெற்று மூன்று பேர் வீடு திரும்பியுள்ளனர். இதை தொடர்ந்து தற்பொழுது சிகிச்சை பெறுவதில் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த புதிய வகை கொரோனா பெற்று பொதுவாகவே அனைவரையும் பாதிக்கவில்லை என்றும் வெளியில் செல்லும் பொழுது கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள் அடைந்து செல்வது கட்டாயம் என்றும் சுகாதாரத்துறை அறிவுறுத்தி வருகிறது.