கடந்த ஒரு மாத காலங்களாகவே தமிழ்நாட்டில் புதிய வகை கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதை தொடர்ந்து நேற்று தமிழ்நாட்டில் 276 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது அதில் சென்னை, கோவை, காஞ்சிபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களிலும் தலா ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
நேற்றைய நிலவரப்படி கொரோனா தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்து 6 பேர் வீடு திரும்பினர். தற்பொழுது தமிழ்நாட்டில் புதிய வகை கொரோனா தொற்றினால் சிகிச்சை பெருவோரின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் கொரோனா உயிரிழப்பு ஏதும் பதிவாகவில்லை என சுகாதாரத்துறை தகவலை வெளியிட்டுள்ளது.