கேரளா மாநிலத்தில் கொரோனா தொற்று ஆனது சற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக குறைந்த எண்ணிக்கையில் இருந்த கொரோனா தொற்று ஆனது கடந்த 24 மணி நேரத்தில் 230 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் உறுதி செய்யப்பட்ட நபர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட வருகிறது.
தற்பொழுது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்களின் எண்ணிக்கை மொத்தம் 949 ஆக அதிகரித்துள்ளது. இந்த செய்தி மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து கொரோனா தொற்றை கட்டுக்குள் வைப்பதற்கு மாநில அரசு பல தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மற்ற மாநிலங்களுக்கு பரவாத வகையில் சில கட்டுப்பாடு நெறிமுறைகளை மாநில அரசு வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.