கேரளாவில் கொரோனா தொற்று சமீப காலமாகவே அதிகரித்துக் கொண்டு இருக்கிறது அதை தொடர்ந்து தற்பொழுது தமிழ்நாட்டின் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் சுகாதாரத்துறை அமைச்சர்கள் சில வழிகாட்டு நெறிமுறைகளும் அவ்வப்போது வழங்கி வருகின்றனர். சளி மற்றும் காய்ச்சல் இருந்தால் உடனடியாக சிகிச்சை பெற வேண்டும் என்றும் வெளியில் செல்லும் பொழுது முக கவசம் அணிவது கட்டாயமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் சுகாதாரத் துறையை சார்பில் அறிவுரை வழங்கி வருகின்றனர்.
உலக நாடுகளிலும் கொரோனா தொற்றின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து செல்கிறது. இருந்தபோதிலும் கொரோனா தொற்றினால் ஏற்படும் பாதிப்பு குறைவாகவே இருக்கிறது என்றும் சில தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் நேற்று தமிழ்நாட்டில் 528 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த 14 பெயருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் இரண்டு பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அதேபோல் கோவை, திருவண்ணாமலை, திருச்சி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி இருக்கிறது. மேலும் நேற்று கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து 8 பேர் வீடு திரும்பியுள்ளனர். தற்பொழுது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 104 ஆக அதிகரித்துள்ளது . நேற்று கொரோனா பாதிப்பினால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று சுகாதாரத்துறை தகவலை வெளியிட்டுள்ளது.