Home » Blog » பரவி வரும் புதிய வகை கொரோனா யார் யாரெல்லாம் பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டும் …?

பரவி வரும் புதிய வகை கொரோனா யார் யாரெல்லாம் பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டும் …?

by Pramila
0 comment

தற்போது புதியவகை கொரோனா பரவி வருகிறது . காய்ச்சல் , தொண்டை வலி , மூச்சுத்திணறல் , சளி இவையெல்லாம் கொரோனாவின் அறிகுறிகள் . இந்த அறிகுறிகள் இருப்பவர்கள் அனைவரும் ஆர் .டி .பி .சி .ஆர் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

பரவி வரும் புதிய வகை கொரோனாவான கே.என்.1 முதலில் கேரளாவில் கண்டுபிடிக்கப்பட்டது . தற்போது கோவா , மகாராஷ்டிரா , கர்நாடகா , தெலுங்கானா , மேலும் தமிழ்நாட்டில் என கே.என்.1 புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில் . இதை கட்டுப்படுத்துவதற்காக மாநில அரசுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை மத்திய சுகாதாரத்துறை வழங்கி வருகிறது . அது மட்டுமின்றி அறிகுறிகள் உள்ளவர்கள் அனைவரும் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர் . எனவே தமிழகத்தில் அறிகுறிகள் உள்ளவர்களுக்கு ஆர் .டி .பி .சி .ஆர் பரிசோதனை நடத்த வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வநாயகம் உத்தரவிட்டார் .

இந்த நிலையில் அறிகுறிகள் உள்ளவர்களின் தினசரி எண்ணிக்கை 350 க்கும் மேற்பட்டோர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர் . அதுமட்டுமின்றி இந்த ஆர் .டி .பி .சி .ஆர் பரிசோதனையை யாரெல்லாம் செய்து கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு செல்வவிநாயகம் சுற்றறிக்கை மூலமாக அறிவித்துள்ளார்.

அந்த சுற்றறிக்கையில் காய்ச்சல் , தொண்டை வலி , மூச்சுத்திணறல் , சளி , இந்த அறிகுறிகள் இருப்பவர்கள் அனைவரும் ஆர் .டி .பி .சி .ஆர் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் . மேலும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் , உறுப்பு மற்றும் சிகிச்சை மேற்கொண்டவர்கள் , இணை நோயாளிகள் ஆர் .டி .பி .சி .ஆர் கொரோனா பரிசோதனை கட்டாயமாக மேற்கொள்ள வேண்டும் . இதில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர் இருப்பின் அவருடன் தொடர்பில் இருந்தவர்களும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளார் .

You may also like

Leave a Comment

நம் நிறுவனம்

தினமதி என்பது சந்தா இல்லாத தமிழ் இதழ் மற்றும் ஆன்லைன் சேவைகளை உலகம் முழுவதும் வழங்கும் மல்டிமீடியா நிறுவனமாகும்.

செய்திமடல்

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

Copyrights © 2024 Dinamathi.com. All rights reserved.