தீபாவளி பண்டிகை வருவதை முன்னிட்டு தமிழ்நாட்டில் பட்டாசு கடை வைப்பதற்கு உரிய நிபந்தனைகளின் படி ஆன்லைனில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தற்காலிகமாக பட்டாசு கடைகளை அமைத்துக் கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து வருகின்ற 19 – ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பும் https://www.tnesevai.tn.gov.in என்ற வெப்சைட்டின் மூலம் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து பதிவு செய்து கொள்ளலாம் என்ற அறிவிப்பும் வெளியிட்டுள்ளது.
இந்த விண்ணப்பங்களை பூர்த்தி செய்வதற்கு மக்களுக்கு எளிதாகும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து இ சேவை மையங்களிலும் இணையதளம் மூலம் ஆவணங்களை பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
மேலே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பம் வருகின்ற 19 – ஆம் தேதிக்குள் இணையதள வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அதன் பிறகு காலதாமதம் ஆனால் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பானது தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக செய்தி குறிப்பில் வெளியிடப்பட்டுள்ளது.