இந்தியா முழுவதும் தற்போது ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வருகின்றன.போலீஸ்,சுங்க துறை என பல்வேறு வழிகளில் இணைய வழி மோசடிகள் குறித்து தமிழக போலீசார் தீவிரமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக ஆவடி காவல் ஆணையரகதிற்கு உட்பட்ட ஆவடி காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் ரமணி ஆவடி மார்கெட் பகுதி,வணிக வளாகங்கள்,மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒலி பெருக்கி கொண்டு சென்று வீதி வீதியாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
அப்படி ஆவடி குடியிருப்பு பகுதி வாசிகளுக்கு இணையதள மோசடிகள் எப்படி நிகழ்கிறது,என்ன வழிமுறைகளை மோசடி காரர்கள் பயன்படுத்துகின்றனர் எனவும், வங்கி கணக்கு எண், பாஸ்வேர்டு போன்றவற்றை யார் கேட்டாலும் கூற கூடாது என கூறி மக்களுக்கு அறிவுரை வழங்கினார்.
அப்பொழுது கூட்டத்தில் இருந்து பேசிய பெண் ஒருவர் தனது மருமகளுக்கு மோசடிகாரர்கள் தொடர்பு கொண்டு துபாயில் போதை பொருள் விற்பனை செய்துள்ளதால் உங்களை டிஜிட்டல் அரெஸ்ட் செய்வதாக கூறி ஏமாற்ற முயன்றனர், எனது மருமகள் TALENTED என்பதால் மோசடியில் சிக்கவில்லை என கூறி மருமகளுக்கு மாமியார் புகழாரம் சூட்டினார்.
இதனை தொடர்ந்து மோசடி குறித்த புகார் எண்கள் அடங்கிய விழிப்புணர்வு துண்டறிக்கை வழங்கினர்.