தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவிவரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இருப்பதாகவும். மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை புயலாக வங்க கடல் பகுதியில் வலுப்பெறக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் வட மேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டி உள்ள வட தமிழக கடலோரப் பகுதிகளில் வடக்கு திசையில் நகரக்கூடும் என்றும். வருகின்ற 5 தேதி நெல்லூருக்கும், மசூலிப்பட்டினத்திற்கும் இடையில் புயலாக கரையை கடக்க கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை வெளியிட்டுள்ளது.
மேலும் இந்த புயலுக்கு மிக்ஜம் என்று பெயரிடப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு வருகின்ற 2 நாட்களுக்கும் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவலை வெளியிட்டுள்ளது,