வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது. இதை தொடர்ந்து நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையிலிருந்து தெற்கு தென் கிழக்கு பகுதியில் 1,050 கிலோ மீட்டர் தூரத்திலும். நாகையிலிருந்து 880 கிலோ மீட்டர் தூரத்திலும் நிலை கொண்டுள்ளது. காற்றலுத்த தாழ்வு மண்டலம் தமிழகம் மற்றும் இலங்கையை நோக்கி நகரக்கூடும் என்றும் புயலாக வலுப்பெறுமா என்று வருகின்ற நாட்களில் கணிக்கப்படும் என்றும் சென்னை வானிலை மையம் தகவலை வெளியிட்டுள்ளது.
இதை தொடர்ந்து தமிழகத்தில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் இன்று முதல் அடுத்த இரண்டு நாட்களுக்கு தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு கனமழை முதல் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழகத்தை நோக்கி நெருங்கி வருவதால் தமிழகத்தில் 9 துறைமுகங்களில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கொண்டு ஏற்றப்பட்டுள்ளது.