வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய நிலையில். இன்று புயலாக உருவெடுக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவலை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த புயல் காரணமாக டிசம்பர் 02 ஆம் தேதி வரை தமிழகத்தில் பரவலாக அனைத்து பகுதிகளிலும் கனமழைக்க வாய்ப்பிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
உருவாக இருக்கும் புயல் சின்னம் பரங்கிப்பேட்டை மற்றும் சென்னைக்கு இடையே கரையை கடக்கும் என்றும் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தகவலை வெளியிட்டுள்ளார். தற்பொழுது உருவாகி இருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று இரவுக்குள் புயலாக உருவெடுக்கும் என்றும். இந்த புயலுக்கு ஃபெங்கல் என பெயரிடப்பட்டுள்ளது.
மேலும் வருகின்ற 30 ஆம் தேதி பரங்கிப்பேட்டை மற்றும் சென்னைக்கு இடையே கரையை கடக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும். இதன் காரணமாக 29 மற்றும் 30 ஆம் தேதிகளில் சென்னையில் கனமழை முதல் அதி கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும். நாளை 28 ஆம் தேதி மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். புயல் கரையை கடந்த பின்பும் டிசம்பர் 01 மற்றும் 02 ஆம் தேதி தமிழக முழுவதும் பரவலாக மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் அவரது சமூக வலைதள பக்கத்தில் தகவலை வெளியிட்டுள்ளார்.