வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அல்லது நாளை புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் தகவலை வெளியிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்பொழுது மணிக்கு 13 கி.மீ வேகத்தில் வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வருவதால் சென்னை உள்ளிட்ட கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. மேலும் வருகின்ற 29 மற்றும் 30 ஆம் தேதி சென்னைக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புயல் சின்னம் 30 ஆம் தேதிக்குள் கரையை கடக்க கூடும் என்றும். தற்பொழுது வரை கரையைக் கடக்க கூடும் இடம் கணிக்கப்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் வருகின்ற நாட்களில் கரையை கடக்க கூடும் இடம் தெளிவாக கணிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய நிலவரப்படி சென்னையை பொறுத்தவரை மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும். டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழை முதல் அதிக கன மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.