வங்க கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவான நிலையில் இன்று பிற்பகல் மாமல்லபுரம் காரைக்கால் இடையே மழை கரையை கடக்க உள்ளது. இதை தொடர்ந்து தற்பொழுது சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கன மழையானது பெய்து வருகிறது. மேலும் புயல் கரையை கடக்கும் நேரத்தில் அதி கன மழையானது பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இடைத் தொடர்ந்து சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் மழை நீரானது தெங்கி உள்ளது. பொதுமக்கள் அவசர தேவைக்கு மட்டுமே வெளியில் செல்ல வேண்டும் என்று அரசு தரப்பில் அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் பொது மக்களுக்கு மழை தொடர்பான புகார்களுக்கும், உதவிகளுக்கும் அரசு சார்பில் தொலைபேசி எண்கள் வழங்கப்பட்டுள்ளது. அதனுடைய மாநில உதவி எண் – 1070, மாவட்ட உதவி எண் 1077, மின்சாரம் – 94987 94987, குடிநீர் – 044-4567 4567, சென்னை மாநகராட்சி – 1913, மகளிர் உதவி எண் – 181, சைல்டு லைன் – 1098