வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மதியம் புயலாக உருவெடுத்துள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருவதாகவும் நாளை காரைக்கால் மகாபலிபுரம் அருகே கரை கடக்க கூடும் என்றும். இதன் காரணமாக மணிக்கு 70 கி. மீ வேகத்தில் சூறாவளி காற்று வீச கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதைத் தொடர்ந்து சென்னையில் இன்று முதல் அதி கன மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை புதுச்சேரி, காரைக்கால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு மஅதி கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும். விழுப்புரம், கடலூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும். வானிலை ஆய்வு மையம் தகவலை வெளியிட்டுள்ளது. நாளை முழுவதும் தொடர்ச்சியான அதிக கன மழை வாய்ப்பிருப்பதால் முன்னேற்பாடுகளை தீவிர படுத்த வேண்டும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.