சமையல் சிலிண்டர் விலை தற்பொழுது அதிகரித்துள்ளது. சிலிண்டர் விலையின் உயர்வுக்கு காரணம் சர்வதேச சந்தையின் நிலவும் கச்சா எண்ணெயின் விலையில் ஏற்படும் மாற்றம். டாலருக்கான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த விலை நிர்ணயிக்கப்படுகிறது.
மாதம் தோறும் பெட்ரோல், டீசல், கேஸ் விலையில் மாற்றம் ஏற்படும். இதைத் தொடர்ந்து வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை இன்று ரூ. 26.50 காசுகள் உயர்ந்து ரூ. 1, 968. 50 – க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எதுவும் மாற்றமில்லை ரூ. 918.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.