கடந்த சட்டப் பேரவை தேர்தலுக்கான பிரச்சாரம் விக்கிரவண்டியில் நாம் தமிழர் கட்சி சார்பில் சாட்டை துரைமுருகன் திமுகவுக்கு எதிராக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து அவதூறாக பாடல் பாடினார் இதை தொடர்ந்து வழக்கு பதிவு செய்யப்பட்டு சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை தீவிர படுத்தப்பட்டது. சாட்டை துரைமுருகனை தொடர்ந்து சீமான் பொதுக் கூட்டத்தில் பேசியபோது சாட்டை துறைமுருகன் பாடிய பாடலை நானும் பாடுவேன் காவல்துறை என்ன செய்யும் என்று சவால் விடுத்துள்ளார். சவால் விடுத்ததும் அல்லாமல் அவதூறு வார்த்தைகளையும் பயன்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது.
அவதூறாக பேசியதை தொடர்ந்து சீமான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. சீமான் மீது போடப்பட்ட வழக்கை விசாரிக்க கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தற்பொழுது உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் சீமானுக்கு குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.