தற்போது தமிழ்நாடு முழுவதும் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது . நாள்தோறும் சுமார் 30க்கும் மேற்பட்டவர்கள் டெங்குவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் . எனவே அரசு மருத்துவமனைகளில் இதற்கென தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது . அதுமட்டுமின்றி அரசு தீவிரமாக டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது .
டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகளை மற்றும் பாதிப்பு குறித்து சென்னை மாநகராட்சி கமிஷனர் ஜே.ராதாகிருஷ்ணன் மக்களிடம் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு வந்தார் . இந்த நிலையில் கடந்த வாரம் திங்கட்கிழமை அவருக்கு திடீரென உடல்நிலை சோர்வு ஏற்பட்டு காய்ச்சல் ஏற்பட்டது . அதையடுத்து பரிசோதனை செய்ததில் அவருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது . மேலும் அவர் கடந்த ஒரு வாரமாக வீட்டிலேயே தங்கி ஓய்வெடுத்து வருகிறார் . அதுமட்டுமின்றி டெங்கு காய்ச்சலுக்கு வீட்டிலேயே மருத்துவ சிகிச்சையும் மேற்கொண்டு வருகிறார் . தற்போது அவரது உடல்நிலை முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் விரைவில் குணமடைந்த பணிக்கு திரும்புவார் என்றும் கூறியுள்ளனர் .