தமிழகத்தில் கடந்த சில நாட்களாக டெங்கு மற்றும் ப்ளு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்களிடையே பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து மருத்துவமனையில் நாள்தோறும் 5000 – க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த காய்ச்சலுக்கான அறிகுறியாக சளி, தொண்டை எரிச்சல் மற்றும் உடல் வலி, தீராத தலைவலி என இதன் அறிகுறிகள் காணப்படுகிறது. இது போன்ற ஏதேனும் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவர்கள் அணுக வேண்டும் என்றும் மருத்துவ குழு அறிவுறுத்தியுள்ளது.
ப்ளூ காய்ச்சல் ஆனது நேரடியாக நுரையீரலை பாதிக்கக் கூடியது. எனவே அறிகுறிகள் தென்பட்ட உடனே மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை எடுப்பது மிகவும் நல்லது ப்ளூ காய்ச்சலுக்கான அறிகுறியாக வறட்டு இருமல், வாந்தி, உடல் சோர்வு, தொண்டை அலர்ஜி போன்றவை காணப்படுகிறது. இதை தொடர்ந்து வயிற்றுப்போக்கு உள்ளிட்ட அறிகுறிகளும் இருந்தால் அலட்சியப்படுத்தாமல் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுவது அவசியம்.