மயிலாடுதுறை நகரில் கடந்த ஒரு வாரமாக சிறுத்தை குடியிருப்பு பகுதிகளில் சுற்றித் திரிவதாக வெளிவந்த செய்தியை அடுத்து சிசிடிவி காட்சிகளிலும் பதிவானது அதன் அடிப்படையில் சிறுத்தை உலாவிய பகுதிகளில் கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பை தீவிர படுத்தினர். இந்நிலையில் கடந்த 2 ஆம் தேதி சிறுதையின் புகைப்படம் பதிவானதை தொடர்ந்து ஆரோக்கியநாதபுரம் பகுதியில் பதட்டம் நிலவியது.
இதைத் தொடர்ந்து வனத்துறையினர் சிறுத்தை பிடிக்க தீவிர கண்காணிப்பில் செயல்பட்டு வந்தனர். மயிலாடுதுறை சுற்றுவட்டார பகுதிகளில் வனத்துறையினர் கூண்டுகள் அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்நிலையில் மயிலாடுதுறை ரயில் நிலையம் அருகே அமைந்துள்ள காவேரி பாலத்தில் சிறுத்தையின் எச்சம் காணப்பட்டதாக வெளிவந்த செய்தியின் அடிப்படையில் வண்டலூர் உயர் தொழில்நுட்ப அலுவலகத்திற்கு சிறுத்தையின் எச்சம் மாதிரி அனுப்பி வைக்கப்பட்டது.
மயிலாடுதுறை சுற்றுவட்டார பகுதிகளில் சிறுத்தையின் கால் தடம் உள்ளதாக அவ்வப்போது வெளியான செய்திகளை அடுத்து வனத்துறையினர் ஆய்வுகளை மேற்கொண்டு வந்தனர். தீவிரமாக சோதனையில் ஈடுபட்ட வந்த வனத்துறையினர் காஞ்சுவாய் பகுதியில் சிறுத்தையின் கால் தடம் கண்டறியப்பட்ட நிலையில் வனத்துறை அதிகாரிகள் காஞ்சுவாய் பகுதியை சுற்றி கூண்டுகள் அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர் 50-க்கும் மேற்பட்டோர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இருந்த போதிலும் சிறுத்தை பிடிபடாத நிலையில் சுமார் ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் அமைந்துள்ள தஞ்சை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் எல்லை பகுதி இருப்பதால் சிறுத்தை இடம்பெயர்ந்து இருக்கலாம் என்று சந்தேகம் நிலவியது இதைத் தொடர்ந்து தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் ஆகிய பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக சில செய்திகள் பரவி வந்த நிலையில் தற்பொழுது வனத்துறை அதிகாரிகள் திருவிடைமருதூர் தாலுகா நரசிங்கப்பேட்டை பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
மயிலாடுதுறை பகுதியில் இருந்து சிறுத்தை தஞ்சை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் இடம்பெயர்ந்து உள்ளதாக வெளியான செய்தியை தொடர்ந்து தஞ்சை மற்றும் திருவாரூர் பகுதியில் உள்ள மக்கள் வீதி அடைந்துள்ளனர். இந்நிலையில் ஏதேனும் வதந்தி பரப்ப நினைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.