நாளை தீபாவளி பண்டிகை அன்று பட்டாசு வெடிப்பதற்கு சென்னை மாநகராட்சி போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர் . இந்த நிலையில் காலை 6 மணி முதல் காலை 7 மணி வரை மற்றும் இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று அறிவித்துள்ளனர் . அது மட்டும் இன்றி அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளையும் வெடிப்பதற்கு தடை விதித்துள்ளது .
இது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்த அரசு . இந்த கட்டுப்பாட்டுகளை பின்பற்ற வேண்டும் என பொதுமக்களிடம் அறிவுறுத்தியுள்ளனர் . கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்தால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர் . பொதுமக்களை கண்காணிப்பதற்காகவே போலீஸ் நிலையங்களை தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது . சென்னையில் உள்ள 12 போலீஸ் நிலையங்களிலும் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளன . பகுதியிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு ஈடுபட்டு வருகின்றனர் .