தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் பட்டாசு கடைகளில் மக்கள் அலைமோதி வருகின்றனர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே பட்டாசு மீது அதிக ஆர்வம் உண்டு. எனவே தீபாவளி அன்று பட்டாசு வெடித்து பலகாரம் சாப்பிட்டு தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாடுவோம்.
தற்பொழுது ஆன்லைனில் அனைத்து பொருளுமே வாங்கி வருகின்றனர். வீட்டு உபயோகப் பொருள் முதல் எண்ணற்ற பொருட்கள் ஆன்லைனில் விற்பனை செய்யப்படுகின்றது. அதை தொடர்ந்து பட்டாசுகளும் ஆன்லைனில் விற்பனை செய்யப்படுகிறது. இருந்த இடத்திலிருந்து ஒரு போன் கால் செய்தால் போதும் ஆர்டர் செய்த பொருள் வீட்டிற்கு வரும். இதை தொடர்ந்து தற்பொழுது தீபாவளி பண்டிகையை ஒட்டி பட்டாசுகளுக்கு எண்ணற்ற ஆஃபர்களை வழங்கி வருகின்றனர்.
இதனால் குறைந்த விலையில் வாங்குவதற்கு மக்களும் போட்டி போட்டு ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனிடையே ஆன்லைனில் பட்டாசு வாங்குவதற்கு மக்கள் ஈடுபாடு காட்டுகின்றனர். இதன் காரணமாக ஆன்லைன் – யில் பட்டாசு வாங்கும் மக்கள் மிகவும் உஷாராக இருக்க வேண்டும் என்று விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆன்லைன் விற்பனையை பயன்படுத்தி மோசடி கும்பல் ஏமாற்றுவதற்கான வாய்ப்புகள் அதிக அளவில் இருப்பதால் மக்கள் உஷாராக இருக்க வேண்டும் என்று பட்டாசு வியாபாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்