தீபாவளி பண்டிகை வரும் 31 – ஆம் தேதி வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதை தொடர்ந்து வார இறுதி நாளான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வருவதால் வெள்ளிக் கிழமையிலும் விடுமுறை அறிவிக்க வேண்டும் என அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதை தொடர்ந்து நவம்பர் 1 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அரசு பொது விடுமுறை வேண்டுமென பல தரப்பிலிருந்து கோரிக்கை விடுத்துள்ளதை தொடர்ந்து தீபாவளி மறுநாளான வெள்ளிக்கிழமை அரசு பொது விடுமுறை அறிவிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவிப்பை தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து அரசு அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நவம்பர் ஒன்றாம் தேதி அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை கொண்டாடும் விதமாக அனைவரும் சொந்த ஊருக்கு செல்வதை முன்னிட்டு தொடர் நான்கு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.