தீபாவளி பண்டிகை வருகின்ற அக்டோபர் 31 – ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதைத் தொடர்ந்து வெளியூரில் உள்ள மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதை தொடர்ந்து பள்ளி கல்லூரிகளுக்கு தீபாவளிக்கு மறுநாள் நவம்பர் 1 ஆம் தேதி பொது விடுமுறை அறிவிப்பு ஏற்கனவே வெளியான நிலையில், தற்பொழுது தீபாவளிக்கு முதல் நாள் விடுமுறையா..? என்ற கேள்வி எழுந்து வருகிறது.
தீபாவளிக்கு முதல் நாள் மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதை கருத்தில் கொண்டு அக்டோபர் 30 -ஆம் தேதி புதுச்சேரி அரசு பொது விடுமுறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து இந்த பொது விடுமுறை அறிவிப்பு ஆனது மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்கு பெரிதும் உதவியாக அமைந்துள்ளது. இந்த பொது விடுமுறை பள்ளி மற்றும் கல்லூரிகள் அரசு அலுவலகங்கள் பொதுப் பணித்துறை நிறுவனங்கள் உள்ளிட்டவற்றிற்கு பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 30 – ஆம் தேதி விடுக்கப்பட்ட பொது விடுமுறையை ஈடு செய்யும் விதமாக நவம்பர் 16 – ஆம் தேதி சனிக்கிழமை அன்று வேலை நாளாக செயல்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.