Home » Blog » திமுக எம்.பி. கவுதமசிகாமணி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு…!

திமுக எம்.பி. கவுதமசிகாமணி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு…!

by Pramila
0 comment

பூத்துறை செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததன் மூலம் அரசுக்கு ரூ.28 கோடி இழப்பு ஏற்பட்டதாக அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதமசிகாமணி எம்.பி  உட்பட 6 பேர் மீது கடந்த 2012 ஆம் ஆண்டு தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர் . இது கடந்த 2006- 2011 காலகட்டத்தில் நடந்ததாகும் . இந்த வழக்கானது விழுப்புரம் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது . மேலும் இந்த வழக்கை அடிப்படையாகக் கொண்டு அமைச்சர் பொன்மொழி மற்றும் அவரது மகன் எம்.பி.கவுதம சிகாமணி ஆகியோர் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து கடந்த ஜூன் மாதம் இவர்களுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறையினர்  சோதனை நடத்தினர் .


இந்த சோதனையின் முடிவில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக அமலாக்கத்துறையினர் தெரிவிக்கப்பட்டது .  மேலும் இந்த வழக்கு தொடர்பாக அமைச்சர் பொன்மொழி மற்றும் அவரது  மகன் உட்பட 6  பேருக்கு எதிராக அமலாக்கத்துறை கடந்த ஆகஸ்ட் மாதம் அன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது . இவர்கள் மீதான குற்றப்பத்திரிக்கையை ஏற்றுக்கொண்ட விழுப்புர முதன்மை அமர்வு நீதிமன்றம் . வழக்கை எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் வழக்குகளை விசாரிக்கும் சிபிஐ சிறப்பு கோர்ட்டிற்கு மாற்ற உத்தரவிட்டுள்ளது . இந்த நிலையில் சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது . அப்போது வழக்கு விசாரணை செய்த பிறகு அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் உட்பட 6 பேரும் வரும் 24ஆம் தேதி அன்று நேரில் ஆஜராக வேண்டும் என்று சமன் அனுப்பி உத்தரவிட்டுள்ளது .

 

You may also like

Leave a Comment

நம் நிறுவனம்

தினமதி என்பது சந்தா இல்லாத தமிழ் இதழ் மற்றும் ஆன்லைன் சேவைகளை உலகம் முழுவதும் வழங்கும் மல்டிமீடியா நிறுவனமாகும்.

செய்திமடல்

Subscribe my Newsletter for new blog posts, tips & new photos. Let's stay updated!

Copyrights © 2024 Dinamathi.com. All rights reserved.