அமைச்சர் துரைமுருகனுக்கு திடீரென்று உடல்நல குறைவு ஏற்பட்டதால் அப்பல்லோ மருத்துவமனையில் அமைச்சர் துரைமுருகன் அனுமதிக்கப்பட்டுள்ளார். துரைமுருகன் திமுகவின் பொதுச் செயலாளராகவும் தமிழக நீர்வளத்துறை அமைச்சராகவும் பணியாற்றி வருகிறார்.
நேற்று முன்தினம் திடீரென்று காய்ச்சல் மற்றும் சளி பிரச்சனை இருந்ததால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை தொடர்ந்து அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த துரைமுருகன் நேற்று உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதால் மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்ததில் தற்பொழுது உடல்நிலை நல்ல முன்னேற்றத்தில் இருப்பதால் வீடு திரும்பினார்.