அதிமுக தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி தற்பொழுது அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். இதை தொடர்ந்து தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் குறித்து எந்த ஒரு விமர்சனமும் அதிமுக தரப்பில் இருந்து வரக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளார்.
வருகின்ற 2026 – ஆம் ஆண்டு தமிழக வெற்றி கழகத்துடன் அதிமுக வலுவான கூட்டணி அமைக்க வாய்ப்பிருப்பதாகவும் இந்த செயல்பாட்டில் இருந்து தெரிய வருவதாக அரசியல் வட்டாரம் கூறுகிறது.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ளார். இதை தொடர்ந்து இக்கட்சிக்கான முதல் மாநாட்டை கடந்த மாதம் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளார். இதனிடையே அரசியல் வட்டாரங்களில் பல விமர்சனங்களும் எழுந்து வருகிறது.
இந்த நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமி இந்த ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எதிர்கட்சி தலைவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் யார் வேண்டுமானாலும் கூட்டணி வைத்துக் கொள்ளலாம் என்று தகவல் வெளியேற்றுள்ளார். இதை தொடர்ந்து வருகின்ற 2026 ஆம் ஆண்டு அதிமுகவுடன் தமிழக வெற்றி கழகம் கூட்டணி வைக்குமா என்று மக்களிடையே பேசப்பட்டு வருகிறது.