நேற்று திருச்சி விமான நிலையத்தில் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களின் சந்திப்பின்போது சில தகவல்களை பகிர்ந்துள்ளார் அதன்படி கடந்த 2011 முதல் 2021 வரை அதிமுக ஆட்சி மக்களுக்கு சிறப்பான ஆட்சியாக செயல்பட்டது.
மேலும் அதிமுக ஆட்சியில் தான் தமிழ்நாட்டில் ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகளை துவங்கி சாதனை படைத்துள்ளோம். ஆனால் 2021 – யில் திமுக அறிவித்த எந்த ஒரு வாக்குறுதியையும் 10 சதவீதம் கூட இதுவரை முடிக்கவில்லை.
அதிமுகவை திமுக விமர்சிப்பதற்கு எந்த ஒரு தகுதியும் இல்லை என்றும் திமுகவில் கருணாநிதி குடும்பத்தைச் சார்ந்தவர்கள் மட்டுமே அரசியல் செய்ய முடியும் என்றும் கூறியுள்ளார்.
வருகின்ற 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் அதிமுக எந்த கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்ளும் என்ற கேள்விக்கு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அதிமுக எப்பொழுதும் ஒத்த கருத்துடைய கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்ளும் என்றும். வருகின்ற தேர்தல் சூழ்நிலையை பொறுத்தே தீர்மானம் அளிக்கப்படும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பதில் அளித்துள்ளார்.