தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது இதை தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு என்னும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. இதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள குறிப்பிட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை ஆனது வருகின்ற ஜூன் மாதம் 4 ஆம் எண்ணப்பட உள்ள நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் பாதுகாப்பு ஏற்பாடு தீவிர படுத்தப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகம் சில முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளது அதன்படி பொறியியல் மாணவர்களுக்கான இறுதி தேர்வானது வருகின்ற 15-ம் தேதி முதல் தொடங்கியிருந்த நிலையில் தற்போது நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை தொடந்து செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகின்றது என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.