பொள்ளாச்சியில் கோட்டூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்பொழுது 40 வருடங்களுக்கு முன்பு அந்த பள்ளியில் படித்த மாணவர்கள் ஒன்று சேர்ந்தனர். பல நினைவுகளையும் பகிர்ந்து அந்த நாளை மகிழ்ச்சியாக நண்பர்களுடன் கொண்டாடி வந்தனர்.
அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் நடராஜன் ( வயது 88 ) அவர் பேசுகையில் அவருடைய அனுபவங்களும் மாணவர்களுடனான நினைவுகளையும் பகிர்ந்து கொண்டார். மேலும் சில மாணவர்கள் அவர்களுடைய நினைவுகளை அனைவர் முன்னிலையிலும் பகிர்ந்து கொண்டனர் அப்பொழுது ஆசிரியரிடம் பிரம்பில் அடி வாங்கியது மறக்க முடியாத அனுபவம் என்றும் தற்பொழுது நினைவுக்கு வருகிறது என்று கூறினார். அப்பொழுது அதே ஆசிரியர் நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார் அவரிடம் பிரம்பை கொடுத்து அந்த மாணவர் திரும்ப அடியை பெற்றுக் கொண்டுமகிழ்ந்தார் இந்த செயல் அனைவருக்கும் சிரிப்பலையை ஏற்படுத்தியது.