தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை ஏலம் விடும்படி பெங்களூருவை சேர்ந்த சமூக ஆய்வலர் நரசிம்மமூர்த்தி கர்நாடகா அரசிடம் மனு தாக்கல் செய்திருந்தார் இதை தொடர்ந்து அவர் மனுவை விசாரித்த நீதிபதி ஜெயலலிதா பயன்படுத்திய பொருட்கள் மற்றும் நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்க உத்தரவிட்டிருந்தார்.
இதை தொடர்ந்து ஜெயலலிதாவின் வாரிசு என உரிமை கோரி ஜே. தீபா மற்றும் ஜெ. தீபக் ஆகியோர் கர்நாடகாமனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த சிறப்பு கோர்ட் அந்த மனுவை தள்ளுபடி செய்துள்ளது. இதை தொடர்ந்து ஜெ. தீபக் மற்றும் ஜே. தீபா ஆகியோர் கர்நாடகா ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
இதை தொடர்ந்து சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பயன்படுத்திய பொருட்கள் மற்றும் நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்க விதிக்கப்பட்ட உத்தரவில் இடைக்கால தடை நீடிக்கப்பட்டுள்ளது என நீதிபதி முகமது நவாஸ் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில் ஜெ. தீபா தரப்பிலிருந்து விசாரணை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து நீதிபதி முகமது நவாஸ் இந்த வழக்கை ஏப்ரல் 15 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார். மறு உத்தரவு வரும் வரை ஜெயலலிதாவின் பொருட்கள் மற்றும் நகைகள் தமிழக அரசிடம் ஒப்படைக்க விதிக்கப்பட்ட தடை நீடிக்கும் என்று கூறியுள்ளார்.