தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையின் பேஸ்புக் பக்கமானது திடீரென்று முடக்கப்பட்டுள்ளது. பள்ளி கல்வித்துறையின் பேஸ்புக் பக்கத்தை மர்ம நபர்கள் முடக்கியுள்ளதாகவும் மேலும் நடிகர் விஜயின் படங்களில் உள்ள காட்சியை பள்ளி கல்வித்துறையின் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இச்சம்பவம் பள்ளி கல்வித்துறை இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் தமிழக அரசின் பள்ளி கல்வித்துறையின் பேஸ்புக் பக்கத்தை முடக்கியது யார் என்றும் நடிகர் விஜய் நடித்துள்ள படத்தின் காட்சிகளை கல்வித் துறையின் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளது யார் என்றும் சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.