ஃபெஞ்சல் புயல் பாதிப்பால் தமிழகத்தில் பல இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மக்களின் வாழ்வாதாரம் மிகுந்த பாதிப்படைந்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் முதல் ஆளாக உதவி செய்ய முன்வந்துள்ளார்.
ஃபெஞ்சல்புயலின் தாக்கத்தால் இப்போது வரை தங்களுடைய இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாமல் அவதிப்பட்டு கொண்டிருக்கும் மக்களுக்கு முதல் ஆளாக சிவகார்த்திகேயன் நிவாரணம் வழங்கியுள்ளார்.மழையின் காரணமாக சூழ்ந்துள்ள தண்ணீரினால் வெள்ளகாடாக காட்சியளிக்கக்கூடிய பகுதிகளில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் முடங்கக் கூடிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். வீடுகளில் வெள்ள நீர் புகுந்ததால் பூச்சி மற்றும் பாம்புகளின் அச்சுறுத்தலுக்கும் ஆளாகி இருக்கின்றனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு சார்பில் இதுவரை போதிய உதவி தொகை கிடைக்காத நிலையில் சமூக ஆர்வலர்கள் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும் அரசு தரப்பில் பாதிக்கப்பட்ட விழுப்புரம் கடலூர் கிருஷ்ணகிரி கள்ளக்குறிச்சி மாவட்டங்களை சேர்ந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 2000 ஃப்ரெஞ்சல் புயல் நிவாரண உதவித்தொகையாக வழங்க முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
வெள்ள நீர் வடியாத பகுதிகளில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாது விவசாயிகளின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் பல தங்களுடைய நிலத்தில் பயிரிட்ட பயிர்களை ஃபெஞ்சல்புயலால் இழந்து விட்டதாகவும் ஆடு, மாடுகள் வெள்ளத்தில் சிக்கி இறந்ததாகவும் கண்ணீர் விட்டு வருகின்றனர். சிலர் உடைமைகளையும் இழந்து தவிக்கின்றனர். விவசாயிகள், அரசு தான் தங்களுக்கு உதவ வேண்டும் என கோரிக்கை முன் வைத்துள்ளனர்.
முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு சிவகார்த்திகேயன் 10 லட்சம் காசோலையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கியதை தொடர்ந்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.சில பிரபலங்கள் 100 கோடி சம்பளம் வாங்கும் நிலையிலும் கூட இதுவரை, மக்களுக்கு உதவ முன் வராத நிலையில் சிவகார்த்திகேயனின் உதவி மக்களிடம் கவனத்தைப் பெற்றுள்ளது.