வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில் நேற்று புயலாக உருவெடுக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்த நிலையில் தாமதமாகியுள்ளது. இதைத் தொடர்ந்து இன்று இரவுக்குள் புயலாக உருவெடுக்கும் என்றும். இதன் காரணமாக தமிழக முழுவதும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒரே இடத்தில் தொடர்ந்து 6 மணி நேரம் நிலை கொண்டிருந்தது. தற்பொழுது மணிக்கு 3 கிலோ மீட்டர் வேகத்தில் மிக மெதுவாக நகர்ந்து வருகிறது. தற்பொழுது இருக்கும் நிலவரப்படி இலங்கை திரிகோணமலையின் வடகிழக்கு திசையில் 110 கி. மீ தொலைவிலும். நாகப்பட்டினத்தில் இருந்து 310 கி.மீ தொலைவிலும். அதேபோன்று புதுச்சேரியில் இருந்து 410 கி. மீ தொலைவிலும். சென்னையில் இருந்து 480 கி.மீ தொலைவிலும் தற்பொழுது நிலை கொண்டுள்ளது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு வடமேற்கு திசை நோக்கி மேலும் நகரக்கூடும் என்றும். வருகின்ற 30ஆம் தேதி காரைக்கால் மாமல்லபுரம் இடையே கரையை கடக்க கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தகவலை வெளியேற்றுள்ளது. மேலும் புயலாக உருவெடுத்து கரையைக் கடக்கும் முன்பு புயல் வலுவிழாந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே கரை கடக்கும் என்றும். கரை கடக்கும் பொழுது சுமார் 50 முதல் 70 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீச கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து நாளை மற்றும் நாளை மறுநாள் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் கடலூர் ஆகிய 5 மாவட்டங்களுக்கும் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.