வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலும் இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாக உள்ள நிலையில் அடுத்ததாக ஃபெங்கல் புயலாக உருவெடுக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வ தகவலை தற்பொழுது வெளியிட்டுள்ளது. தற்பொழுது காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையிலிருந்து 830 கி.மீ தொலைவிலும், நாகப்பட்டினத்தில் இருந்து 630 கி.மீ தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 750 கி.மீ தொலைவில் நிலைக் கொண்டுள்ளது.
அடுத்த இரண்டு நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழகம் மற்றும் இலங்கை கடற்கரை நோக்கி நகரக்கூடும் என்றும். உருவான இருக்கும் புயல் எங்கே கரையை கடக்கும் என்று வருகின்ற நாட்களில் கணிக்கப்படும் என்றும். இதன் காரணமாக தமிழகத்தில் மிக கனமழை முதல் அதிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் மாநில ஆய்வு மையம் தகவலை வெளியிட்டுள்ளது.