சென்னையில் கடந்த ஒரு மாதமாக மர்ம காய்ச்சல் ஒன்று பரவி வருகிறது,கடந்த மாதம் வெயில் அதிகம் அடித்தது அதே சமயத்தில் மழையும் அதிக அளவில் பெய்தது இதனால் ஒரு வித மர்ம காய்ச்சல் ஒன்று பரவி வருகிறது.இது வெப்ப நிலை மாற்றத்தால் வந்துள்ளது.
இது தொண்டை வலி ,காய்ச்சல் ,சளி,இருமல் போன்ற அறிகுறிகளை கொண்டு உடல் நிலையை பதிக்க படவைக்கிறது. இந்த மர்ம காய்ச்சலினால் அரசு மருத்துவமையில் மற்றும் தனியார் மருத்துவமையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இதனால் 50 சதவிதம் விகம் அதிகரித்துள்ளது.
முக்கியமாக இது நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கே சில பதிப்பை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள் .சென்னையில் கடந்த மதம் பெய்த மழையினால் டெங்கு கொசு அதிகம் உற்பத்தி ஆகிவிட்டது .அதுமட்டுமின்றி ஈக்கள் அதிகம் ஆனதால் பலங்கள்லை நன்றாக கழுவி சாப்பிட வேண்டும் ,மீன்,மட்டன் அனைத்தையும் நன்றாக வேக வைத்து சாப்பிடவேண்டும்.
தற்போது இந்த மர்ம காய்ச்சலால் அரசு மருத்துவமை மற்றும் தனியார் மருத்துவமனையில் அதிக அளவில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில்,
“சென்னையில் கொசு மற்றும் ஈக்களை கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. தினமும் காலை மற்றும் மாலை நேரத்தில் மழைநீரை தேக்கி வைக்கும் தொட்டி , வடிகால் தொட்டி, வடிகால்,நீர்நிலைகள், அனைத்தையும் செறிவற கண்காணித்து வருகிறோம்,குப்பை தொட்டிகள் இருக்கும் பகுதிகளில் மருந்து தெளிக்கப்படுகிறது. கொசு புகையும் அடிக்கப்படுகிறது. பொதுமக்களும் தங்களின் வீடு மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும்என்றுஏன்று அவர் கூறினார் ” .